google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பைத்தியக்காரப் புலம்பல்

15/09/2012

பைத்தியக்காரப் புலம்பல்



 
நாடு திருந்திவிட்டதா?
கள்ளச்சாராயம் காயப்பவர்கள்
காணாமல் போனார்களோ?
(அதுதான் இப்போ கடைகளில்  
நல்லச்சாராயம் விற்க்கின்றார்களா?
அன்றே கொள்ளும் கள்ளச்சாராயம்
நின்று கொள்ளும் நல்லச்சாராயம்)   
 
மக்களெல்லாம் இலவசச் சோறு    
நேரம் தவறாமல் உண்டுவிட்டு
அழகாக தூங்கிக்கொண்டு...
(அது சரிப்பா...
பழனியில் சாப்பிட
மொட்டை போடணுமா?)

பொடிநடையாய் போய்வரலாம்
கூடங்குளத்துக்கு என்றால்
பாதையில் தடை கற்கள்
(கரண்ட் வருகிறதோ?
கத்தரிக்காய் வருகிறதோ?
கலவரம்தான் வருகிறது?)

அன்றொருநாள்
ஜாதித்தலைவரின்
சிமெண்டு சிலையில்
கையைக் காணவில்லை
(அடுத்த நாள் 
அடுத்த ஜாதிக்காரர்களுக்கு
அய்ம்பது கைகளை காணவில்லை!)

மதத்துக்கு ஒரு நாடு
நாட்டுக்கு ஒரு மதம்
மதவெறி கொண்டிங்கு
நாட்டை அழிக்கிறார்கள்
(மதவெறி கொண்டவர்கள்
தங்கள் மதத்தை அழிக்கிறார்கள்
தங்கள் நாட்டையும் அழிக்கிறார்கள்)

நாடு செழித்து விட்டதா?
அதென்ன 
கூரை மீது தங்க ஆடு?
(காவேரி ஆற்றில்
கணக்கில்லாத தண்ணீர்
கூரையில் புல் முளைத்ததா?
ஆடு மேயப் பார்க்கிறது)

அதற்குள் வந்துவிட்டார்களா?
பைத்தியக்கார ஆஸ்பத்திரி
பைத்தியக்கார வைத்தியங்கள்
பைத்தியங்களைத் தேடி...........
(நான் பைத்தியம் இல்லையப்பா!
நாட்டுக்கு வைத்தியம் செய்யும்
வைத்தியனப்பா)



Thanks-YouTube-Uploaded by apinternational
 
இது எப்படியிருக்கு?

6 கருத்துக்கள்:

  1. உங்கள் படைப்பு பைத்தியக்காரன் புலம்பல் இல் , எழுத்து நண்பர் muraiyer69 ஒரு கருத்து பதிந்துள்ளார்.
    கருத்து: நாட்டுக்கு வைத்தியம் செய்யும் வைத்தியனப்பா!) ***** சூப்பர் - மு.ரா.

    ReplyDelete
  2. உங்கள் படைப்பு பைத்தியக்காரன் புலம்பல் இல் , எழுத்து நண்பர் pollachi abi ஒரு கருத்து பதிந்துள்ளார்.
    கருத்து: பொடிநடையாய் போய்வரலாம் கூடங்குளத்துக்கு என்றால் பாதையில் தடை கற்கள் (கரண்ட் வருகிறதோ? கத்தரிக்காய் வருகிறதோ? கலவரம்தான் வருகிறது?) அருமையான சாட்டை அடி..! எல்லா வரிகளும் அதன் விமர்சனகளும் இன்னும் அருமை .! வாழ்த்துக்கள்..!.!

    ReplyDelete
  3. ன்பரே...
    உங்கள் படைப்பு பைத்தியக்காரன் புலம்பல் இல் , எழுத்து நண்பர் sankaran ayya ஒரு கருத்து பதிந்துள்ளார்.
    கருத்து: பொடிநடையாய் போய்வரலாம் கூடங்குளத்துக்கு என்றால் பாதையில் தடை கற்கள் (கரண்ட் வருகிறதோ? கத்தரிக்காய் வருகிறதோ? கலவரம்தான் வருகிறது?) ----அருமை அருமை கோவில் திரு திரு விழாக்கள் கூட ஆண்டிற்கு ஒரு முறைதான் வரும் கலவரத் திருவிழாக்கள் இங்கே அன்றாடமாக போய்விட்டது வாழ்த்துக்கள் பரிதி *5 ---அன்புடன்,கவின் சாரலன்

    ReplyDelete
  4. அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  5. ஆழ்ந்த கருத்துக்கள்
    பைத்தியம் பிடித்து, சட்டையை கிழித்துக்கொண்டு ரோட்டில் அலையாமல் இருந்தால் சரிதான் !!!!!

    ReplyDelete
  6. ஆழ்ந்த கருத்துக்கள்
    பைத்தியம் பிடித்து, சட்டையை கிழித்துக்கொண்டு ரோட்டில் அலையாமல் இருந்தால் சரிதான் !!!!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
 
UA-32876358-1